La La Land (2016)

“Here’s to the fools who dream!”

Traffic – தற்காலிக காத்திருத்தல்

நம்மைப் போல் பலரும் பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் அந்த trafficஇல் தினம் காத்துக் கிடக்கின்றனர். அந்தத் தற்காலிகக் காத்திருத்தலில் அவர்கள் சிந்தனை மட்டும் யாருக்கும் காத்திராது பறக்கத் தொடங்கி இருக்கும். நாம் சாலையில் பயணிக்கையில் எதிர்வரும் speed breakers போல்தான் traffic jam. கனவுகளை நோக்கி நாம் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் அந்த தினசரி trafficஐ எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி அந்த trafficஐ அவர்கள் rehearsal செய்யும் களமாய் பயன்படுத்திக் கொண்டனர் இருவரும். Trafficஇல் பல கனவுகளோடு காத்திருக்கும் பல்லாயிரம் பேர்வழிகளில் இரண்டு சராசரி நபர்களின் கதை இது.

Failures

கனவுகள் தேடி போவதைக் குறித்து சமூகம் கூட ஒரு வரைமுறை செய்து வைத்துள்ளது. இருபதுகளின் மத்தியிலோ அதைக் கடந்த பின்போ ஏதாவது ஒரு professional வேலையில் அமர்ந்து வாழ்க்கையைத் தொடங்கி விட வேண்டும். அதுதான் வரைமுறை. கனவுகளுக்கு expiry date நிர்ணயித்து விடுகிறோம்.

அந்தக் கனவுகளை நோக்கி பயணிப்போர் பெரும்பாலும் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பர். அவர்களை ஒத்த வயதினர் எல்லாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்திருக்கையில், the fools who dream மட்டும் உத்ரவாதம் இல்லா கனவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். அதையே இந்த இரண்டு காட்சிகளும் உணர்த்துகின்றன.

Liftஇல் இரண்டு அவள் வயது பெண்களின் வெண்மை ஆடைகளுக்கு மத்தியில் Miaவின் ஆடையில் மட்டும் காப்பி கறை ஒட்டியிருக்கும். அவர்கள் நிதானமாய் பயணிக்கும் அதே உலகில் Mia இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறாள்.

Christmasஇல் சந்தோஷங்கள் பகிரப்பட்டு கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் தனியாய் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். Being unemployed is very depressing. It’s not as easy as we think to go through that phase.

Life is full of surprises!

அன்றைய நாள் தோல்வியிலும் களைப்பிலும் முடிந்தாலும் அவள் இரவில் நண்பர்களின் வற்புறுத்தலில் வெளியே வந்தது இவனைப் பார்க்கத்தான் என்று விதி ஏற்கனவே தீர்மானித்து வைத்தது. காலையில் கேட்ட பேரிரைச்சல் (அவன் கார் horn) இரவில் கேட்டவுடனே instantly கவரும் மெல்லிசை ஆனது. அந்த மெல்லிசை அவளை அவன் எதிரே கொண்டு வந்து நிறுத்தியது. ஏதோ அவனிடம் சொல்ல வாயெடுத்தவளைச் சட்டென கடந்து போனவன் அவளுக்கு ஒரு கேள்விக்குறியாய் தெரிந்தான். ஒரே நாளில் எத்தனை முரணான அபிப்ராயங்கள்தான் அவளுக்கு – இவனைக் குறித்து!

Mia & Sebastian’s Theme

மயக்கம் தந்தது யார்?

Get Serious!

Sis : When are you going to unpack these boxes?
Seb : When I unpack them in my own club
Sis : Oh Sebastian, it’s like a girl broke up with you and you’re stalking her.

ஒருவரது கனவுகள் அல்லது லட்சியங்கள் பிறருக்கு அனாவசியமானதாய் தெரியும் போது அதை அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றவர்களை நீங்கள் பல முறை சந்தித்திருப்பீர்கள்! என்ன, அவர்களையும் அவர்கள் கனவுகளையும் பெரும்பாலோர் seriousஆய் எடுத்திருக்க மாட்டீர்கள். வாழ்க்கையில “get serious”னு உங்க லட்சியங்கள் பார்த்து பிறர் சொல்றப்பெல்லாம் அதில் நாம் எவ்வளவு seriousஆக இருக்கிறோம் என்று justify செய்வதற்கு பதில்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

Expectations vs Reality இதற்கிடையே மாட்டிக் கொண்டு கனவை இறுகப் பற்றிக் கொள்வதற்கும் கூட ஒரு வித guts வேண்டும் இல்லையா! உங்கள் கனவுகள் கேலி செய்யப்படுவது கூட பல முறை பல தருணங்களில் எதிர்நோக்கி இருக்கலாம். அந்தக் கேலிகளை வேடிக்கை பார்த்து பின் அதைக் கடந்து செல்வதே சாமர்த்தியம். அனைவருக்கும் உங்கள் கனவுகளைப் புரிய வைக்க முடியாது. Not everyone will understand your journey. That’s fine. It’s not their journey to make sense of. It’s yours.

சில கனவுகள் கனவாகவே மறைகின்றன. சில நேரங்களில் வரம்புக்கு மீறிய ‘உயர்வான’ அல்லது ‘illogical’ கனவு காண்கிறோம் என்று அந்தக் கனவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட barriersஐ நிர்ணயித்து விடுகிறோம். இதற்கெல்லாம் பயந்தே முக்கால்வாசி பேர்வழிகள் இடையிலே அவர்கள் கனவை மறந்து உலகம் நிச்சயித்து வைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மடிகின்றனர்.

New Season; Same Sunsets

புதிய பருவம் புதிய உறவை அறிமுகப்படுத்தியது. இரண்டு சந்திப்புகளுக்குப் பின், உரையாடல் தொடங்கியது ஏனோ மூன்றாவது சந்திப்பில் தான். ஓரளவுக்குப் பரிச்சயமான அந்நியர்கள் ஆகினர் இருவரும். ஆனால், அவர்களின் தொடர் எதிர்பாரா சந்திப்புகள் எதையோ மறைமுகமாய் இருவருக்கும் உணர்த்த முயற்சித்தன.

Mia : It’s pretty strange that we keep running into each other.
Sebastian : Maybe it’s mean something.

கதிரவன் மறையப் போகும் அந்த இறுதி நிமிடங்கள் சாயங்காலத்தை மேலும் அழகாக்குவதோடு ஒரு ஆழமான தத்துவத்தை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரு சிறந்த daily reminder. தினம் வீழ்ந்து இரவு வந்தாலும், மறுநாள் தான் எழுந்தால்தான் உலகம் விடியலைச் சந்திக்கும் என்பதே அந்த philosophy. படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் நினைவிற்கு வருகிறதா?

“I’m reaching for the heights
And chasing all the lights that shine
And when they let you down
You’ll get up off the ground
Cause morning rolls around
And it’s another day of sun”

The Lighthouse Cafe

Technically the serious conversation begins here. The cafe was just within walking distance of Mia’s working place. Mia அவள் கனவு நிறைவேறும் இடத்திற்கு மிக அருகிலே வேலை செய்கிறாள். She is working at the coffee shop on the Warner Brothers lot. How ironic it is!

எதிர்பாரா சந்திப்புகள் தீர்மானித்த சந்திப்புகளாய் மாறின. அவர்கள் பயணத்தைக் குறித்து நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர். Endless dreams, endless hopes. அதில் எனக்கு பலதும் பிடித்திருந்தன. How nice it is when we’re getting to know someone (weirdo) and their journey towards their dreams. கேட்கவே சுவாரசியமான அனுபமாய் இருக்கல்லவா? இப்போ காதலில் இருப்போர், உங்களின் ஆரம்பகால காதல் நேரங்கள் எப்படி இருந்தன என கேட்டால் கிடைப்பது ஒரே பதில் தான். வசந்தகாலம்.

Mia : Yeah, should’ve been a lawyer.
Sebastian : ‘Cause the world needs more lawyers.
Mia : It doesn’t need more actresses.

சில கனவுகள் சில வேலைகளாகவே கருதப்படுவதில்லை. திறமைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையின் வழி கிடைக்கப்பெறும் வேலைகளே ‘professional jobs’களாய் கருதப்படுகின்றன. Actressகும் lawyerகும் இடையே உள்ள வேற்றுமைகளும் செயல்பாடுகளும் குறித்து சமூகத்திற்குப் பெரும்பாலும் முரண்பாடான புரிதலே இருக்கின்றன.

ஒவ்வொரு முறை உரையாடல் முடித்து விட்டு விடைப்பெறும் தருணம் ஒரு வித incompletenessஐ காட்டுவது போன்ற ஓர் உணர்வு. விடைப்பெற்று போகும் போது, மாறி மாறி திரும்பி பார்த்துக் கொள்ளும் தருணமே ஒரு வித எதிர்பார்ப்பையும் சலனத்தையும் நம்மில் எழ வைக்கின்றன.

“பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே”

“I felt it from the first embrace I shared with you”

The ‘research’ begins!

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்

நமக்குப் பிடித்தமானவர்களின் பிடித்தமைகள் நம் பிடித்தமைகளாய் ஆகும் போது அவர்கள் நம்மவர்களாகி விடுகின்றனர். ஒரு காலத்தில் அவளுக்கு அவ்வளவு ஈடுபாடில்லா jazz இன்று அவளுக்கு நெருக்கமான ஒன்றை நினைவுப்படுத்துகிறது. அவளுக்குரியவனை மட்டுமே நினைவுப்படுத்தும் medium ஆகி விட்டது.

Sebastian jazz குறித்து கொடுத்த விளக்கம் அவள் காதலுக்கு இப்போது மிக பொருத்தமானதாய் இருக்கிறது.

“And so it’s conflict, and it’s compromise, and it’s just new every time. And it’s brand-new every night.”

முரண்பாடான ஒன்று, ஒரு கட்டத்தில் நம்முடன் ஒத்து போய் புதியதாய் தெரிகிறது. Jazz மட்டுமல்ல. அவன் மீது அவளுக்கு எழுந்த அந்த அன்பும் ஒவ்வொரு முறையும் அவளுக்குப் புதுமையாகவே தோன்றியது.

இது ஒரு முறை மட்டும் நடக்கவில்லை. முடிந்த பருவத்தில் கேட்டாலே எரிச்சலூட்டும் அவன் car horn சத்தம் இப்போது கேட்கையில் அவள் சந்தோஷம் அடைகிறாள். அவன் வருகையை அவள் எதிர்பார்க்கிறாள் என்று அவள் தோழியிடம் கூறும் பதிலில் நமக்குப் புரிகிறது.

Mia’s friend : Wow. Is that gonna happen every time?
Mia : I think so (while smiling)

அங்கங்கே கனவிலும் நெஜத்திலும் தெகிட்ட தெகிட்ட காதலிக்கின்றனர் காதலர்கள். இப்போ தைரியமா சொல்லலாம் காதலர்கள்னு. பல dating spots; பல நெருக்கங்கள்; பல முத்தங்கள்; குறைவிலாத jazz; தொடரும் auditions. கனவுகளோடு கை கோர்த்து வாழ்க்கையில் புதிய பாதையில் நாட்களைக் கடந்து கொண்டிருந்தனர் இருவரும். “Never been better” என்பது போல் நாட்கள் மிக சந்தோஷமாய் கழிந்தன.

“A bit of madness is key
To give us new colors to see
Who knows where it will lead us?
And that’s why they need us”

Black vs White

தேவைகளின் நெருக்கடி வரும்போது கனவுகளை compromise செய்ய வேண்டிய கட்டாயமும் வரும். Sebastian Lighthouseஇல் 90-year-olds jazz musicஐ வாசித்த போது அவனிடம் இருந்த அவனது பரிசுத்தமான கனவும் லட்சியமும் இப்போது digital இசையின் கலவையில் அவன் கனவிலும் jazzஇலும் களங்கம் விழுந்தது. ஒரு காலத்தில் இந்த இசையை வெறுத்தவன் இப்போது அதே இசையை வாசித்துக் கொண்டிருக்கிறான், The Messengers எனும் அவன் நண்பன் bandஇல். அவன் கருத்துடன் அவன் நண்பனின் முரண்பாடான கருத்தை எப்படியோ ஏற்றுக் கொண்டாக வேண்டிய காலத்தின் கட்டாயம்.

“How you gonna save jazz if no one’s listening. Jazz is dying because of people like you.”

இந்த திடீர் மாற்றத்தை அவனிடமிருந்து Mia சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த மாற்றத்திற்கு அவளும் ஒரு காரணம் என்பது அவளுக்குத் தெரியாமலே போனது. These are the most painful moments of reality. Compromising your dream to satisfy the society!

Uneasiness

“City of stars
Are you shining just for me?
City of stars
You never shined so brightly”

Fall

Fall it is! புதிய பருவம் பிறக்கும் போதே வீழ்ச்சியோடு பிறந்தது. காதல் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் காலக்கட்டம். Mia அவளது playகாக வேலையாய் இருக்க; Sebastian bandஇல் வேலையாய் இருந்தான். இருவரின் காலங்கள் மாறின; சந்திப்புகள் குறைந்தன; இடைவெளிகள் நீண்டன. நேற்றைய இன்பங்கள் எல்லாம் எங்கே போயின?

பேச வேண்டிய உண்மைகள் எல்லாம் celebrationகாக ஏற்பாடு செய்யப்பட்ட dinnerஇல் விழுந்து உடைந்தன. Sebastian வாழ்க்கையில் ‘get serious’ஆனதை justify செய்ய, அவன் கனவை அழித்து தான் ஒரு decent jobஇல் அமர வேண்டியதில்லை என்று Mia விவாதிக்க உரையாடல் argumentsஇல் முடிந்தது.

Sebastian : Guys like me work their whole lives to be in something that’s successful, that people like. I’m finally in something that people enjoy.
Mia : Since when do you care about being liked?
Sebastian : It doesn’t matter.

அவனது இயலாமையில், அவன் அறிந்தும் அறியாமலும் (?!) விழுந்தன அந்த cruelஆன வார்த்தைகள்.

“Maybe you just liked me when I was on my ass ’cause it made you feel better about yourself.”

கொட்டும் போது எவ்வளவு எளிதாக இருக்கும் வார்த்தைகளைக் கேட்பவர் அள்ளும் போது மட்டும் ஏன் இப்படி கணக்கிறது? வெறும் வார்த்தைகள் இத்தனை ஆழமான வலியை ஏற்படுத்த முடியுமா? வாளையும் மீறி கூர்மையானதா வார்த்தைகள்?

Back to square one!

புது முயற்சிகள் ஏதும் கைக்கூடாமல் நாம் இந்தக் கனவுகளைக் காண்பதே அதிகப்பட்சம் என்ற கட்டத்தில் இருவரும் தள்ளப்பட்டு விட்டனர். கனவோடு அவனையும் அங்கேயே தொலைத்து விட்டு கையில் தோல்வி எனும் அடையாளத்தைப் பற்றியபடி தன் சொந்த வீட்டிற்கே நிம்மதியைத் தேடி போய் விட்டாள். ஒரே நேரத்தில் கனவிலும் உறவிலும் எதிர்கொண்ட தோல்விகளைத் தனியே சமாளிக்கும் மனோத்திடத்தை அவள் இழந்திருந்தாள். அவன் சமாதானங்களுக்கு அவள் அப்போது செவி சாய்க்காமல் அங்கிருந்து, அந்த நகரத்தை விட்டே மறைந்து விட்டாள்.

Sebastian : This is home.
Mia : No. This is not anymore.

மீண்டும், வாழ்க்கை அவனைத் தனியாக நிற்க வைத்து வேடிக்கை பார்த்தது.

That ‘someone’ in the crowd!

“Someone in the crowd could be the one
you need to know
The one to finally lift you off the ground
Someone in the crowd could take you
where you wanna go
If you’re the someone ready to be found”

This may be the sweetest thing her ex (?!) boyfriend has done for her at this point of life. He doesn’t require a patch up in order to come back to her. In that particular scene, Seb quickly reminds me of Vijay Sethupathi in Kadhalum Kadhanthu Pogum. There is no sign of envy, jealousy or hatred. He is truly a genuine man. You can only feel his love towards her. He knows it’s gonna work this time. She was dealing with low self-esteem. He screamed (in a very cute way I guess) at her; he forced her and he managed to console her. A new hope.

Mia : Maybe I’m not good enough.
Seb : Yes, you’re.
Mia : Maybe I’m not. It’s like a pipedream.

“A voice that says, I’ll be here
And you’ll be alright”

The final audition!

“You could just write your own roles. Write something that’s as interesting as you are. And you don’t have to audition for this.”

இந்த ஒரு வாய்ப்புக்காகவே பலர் காத்திருக்கின்றனர். இந்த வாய்ப்பைக் கூட அவளே அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. Seb சொன்னது போல், அவள் சொந்தமாய் எழுதி அரங்கேற்றிய மேடை நாடகம் அவளை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியது. And Seb was there all the time since from the very beginning.

“Here’s to the ones who dream
Foolish as they may seem
Here’s to the hearts that ache
Here’s to the mess we make”

Where are we?

Love too shall pass!
காதலும் கடந்து போகும்!

வாழ்க்கையில பல தோல்விகளைக் கடந்து இந்த decadeஇல் ஏதாவது ஒரு கட்டத்தில் வெற்றி(கள்) சந்தித்திருப்பீர்கள். அவை அனைத்தும் உங்கள் திறமையால் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அந்த வெற்றியை நோக்கி பயணிக்கையில் உங்களுடன் சேர்ந்து பயணித்தோருக்கு இந்த வெற்றியில் பங்குண்டா?

நீங்கள் ஒன்றுமே இல்லாத போது உங்களுடன் இருந்தோர்; உங்களிடம் எந்த வகையிலும் பிரதிபலன்கள் பாராது உங்களுக்கு உதவினோர்; உங்களுக்கு செய்த உதவியை மறந்து போனவர்கள்; உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து அந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் உங்களுடன் இல்லாத பரிட்சயமான அந்நியர்கள். இந்த ரக மனிதர்கள் (well wishers) ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருந்திருப்பர். அவர்களில் ஒரு சிலர் உங்களுடன் தொடர்பில் இருக்கலாம். தொடர்பில் இல்லாமல் உங்கள் வாழ்க்கையிலிருந்து தொலைந்தவர்களை என்று சந்தித்து உங்கள் வெற்றியை அவர்களோடு கொண்டாடி இருக்கின்றனர்?

Mia : I’m always gonna love you.
Seb : I’m always gonna love you too.

I don’t care if I know
Just where I will go
‘Cause all that I need’s this crazy feeling
A rat-tat-tat on my heart”

Dreams come true!

That now our dreams may finally come true!”

Own Club

Seb told this when he had an argument with his sister.
“I’m letting life hit me until it gets tired. Then I’ll hit back. It’s a classic rope-a-dope.”

“We’re gonna play whatever we want; whenever we want; however we want, as long as it’s a pure jazz.”

La La Land (இது ஒரு கனவு நிலை)

Who knows?
Is this the start of something wonderful and new?
Or one more dream that I cannot make true?”

How things might be if they had taken a different path.

Just one thing everybody wants
There in the bars
And through the smokescreen of the crowded restaurants
It’s love
Yes, all we’re looking for is love from someone else”

A lovely night!

“Our paths are crossed for a reason”

ஆயிரம் ஆண்டாகப் பழகிய தோற்றம்.

Do you remember Mia’s dialogues from her first audition? Her current state of mind!
“No, I’m happy for you. I am, I’m happy for you. I just… I just thought… I don’t know what I thought…”

அவள் சொன்னதை அவன் நிஜமாக்கி விட்டான். அவன் கனவும் நிறைவேறி விட்டதை அவள் அப்போதுதான் தெரிந்து கொண்டாள். அவளது வெற்றி அவனுக்கு ஆரம்பத்திலே தெரிந்து விட்டது. தெரிந்தும் அவளைச் சந்திக்கவில்லை. காலம் கைக்கூடாமலே போயிருக்கலாம். உலகம் அவளைத் திரும்பி பார்த்தது. அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஒரு சின்ன புன்னகை கண்ணுக்குத் தெரியாத கண்ணீரில் நனைந்து உதட்டிலிருந்து வெளியே உதிர்ந்தது. அன்பில் தொடங்கி அன்பில் முடிந்தது.

சர்வசாதரணமாய் என்னைக் காயப்படுத்தி விட்ட படம். நம்பிக்கையைத் தொடர்ந்து விதைத்த படம். பெரும்பாலும் அவ்வளவு எளிதில் ஒரு படம் இத்தனை mixed feelings தந்து விடாது. This is something else.

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே!

A rush
A glance
A touch
A dance

2 thoughts on “La La Land (2016)

Leave a comment